சுவிஸ் வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சுற்றத்து முற்றம்" கலைநிகழ்வு நாளை காலை 10:00 மணிக்கு ஆரம்பகாவுள்ளது.
இம்மாபெரும் கலை மகிழ்வு ஒன்று ௬டலானது நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 17 மணிவரை, Gemeindezentrum Brüelmatt Dorfstrasse 10 8903 Birmensdorf என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது.
இலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , பா . அரியநேந்திரன் , சீ . யோகேஸ்வரன், சி .சிறிதரன் மற்றும் முன்னாள் ஊடகவியலாளரான ந .வித்தியாதரன் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றவுள்ளனர்
சுவிஸ் முன்னணி கலைக் கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவியர் பங்குகொள்ளும் இசை நடன கலை நிகழ்வுகளுடன் நெகிழும் நினைவுகளுடன் மகிழும் உறவுகளாய் புலம்பெயர் உறவுகளை இச்சுற்றத்து முற்றத்தில் வந்து சங்கமிக்குமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.
மண்டபத்திற்கு வரும் வழி Bern -Zürich- Chur புதிய வேகவீதியில் Westring-Zürich -Birmensdorf
வட்டக்கச்சி இராமநாதபுர ஒன்றியம்
சுவிஸ்
-
0 Responses to சுவிஸில் "சுற்றத்து முற்றம் 2010" கலை மகிழ்வு ஒன்றுகூடல்