அண்மையில் பதுளையில் நடைபெற்ற கிரிக்கெட் மைதான திறப்பு விழாவின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச துடுப்பெடுத்தாடி விளையாட்டை ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது அவர் எஸ்.எப் என்ற ரகத்தை சேர்ந்த துடுப்பை கொண்டே பந்தை அடித்தாடினார்.
இந்த விடயம் அப்போது பெரியளவில் பேசப்படாத போதும் பின்னர் அரசியல் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.
எஸ்.எப் எனப்படுவது ஜனாதிபதியின் அரசியல் எதிரியான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை குறிப்பதாகும் இதனை வைத்துக்கொண்டே கடந்த ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்தநிலையில் கிரிக்கெட் துடுப்பாட்ட விடயம் ஜனாதிபதிக்கு தெரியவரவே அவர் சார்ந்த அதிகாரிகள், ஜனாதிபதி துடுப்பெடுத்தாடும் வகையில் அமைந்திருந்த துடுப்பில் உள்ள எஸ்.எப் என்ற எழுத்துக்களை மறைத்து பிரசுரிக்குமாறு பத்திரிகைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி படங்களிலும் எஸ்.எப் எழுத்துக்களை காணமுடியவில்லை.
-
0 Responses to ஜனாதிபதி மஹிந்த துடுப்பெடுத்தாடிய மட்டையில் சர்ச்சை