2030 ஆம் ஆண்டில் நாட்டின் தலைவராக வரும் வகையில் இலங்கை ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இணைத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
நாமல் 2030 என இந்த இணையத்தளத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதில் நாமல் தொடர்பான தகவல்களும் அரசியல் அம்சங்களும் உள்ளடங்கியுள்ளன.
எனினும் ஏனைய கட்சி உறுப்பினர்களை பாதிக்கும் என்பதற்காக இந்த இணையத்தளத்தை பிரசாரப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்ட போதும் நாமலின் இணையத்தளம் பிரசாரப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நாமலை ஜனாதிபதியாக கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி பதவிக்காலத்தின் வரையறையை நீடித்தார் என்ற குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.
-
0 Responses to 2030 ஆம் ஆண்டின் தலைவர் நாமல் ராஜபக்ச